இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக, வாஷிங்டன் வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வர்த்தகம் முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன.
இதே போன்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார். சீனாவின் இந்தோ பசிபிக் ஆதிக்கத்தை குறைப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பங்கேற்கும் மோடி, பின்னர் தனியாகவும் அவரை சந்தித்துப் பேசுகிறார்.