ரஷ்ய கடற்படையினர், 350 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்ககூடிய பாஸ்டியன் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டனர்.
7 ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் வசம் இருந்த கிரீமியாவை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கிரீமியா அருகே தற்போது உக்ரைன், அமெரிக்கா படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, கருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய கடற்படையினர் நிலத்தில் இருந்தபடி கடலில் உள்ள இலக்குகளை ட்ரோன்கள் மூலம் கண்டறிந்து, அவற்றைத் தகர்க்க கூடிய வல்லமை படைத்த பாஸ்டியன் தடுப்பு அமைப்பை சோதனையிட்டனர்.