அமெரிக்காவில் தஞ்சமடைய டெக்சாஸ் நகரில் காத்திருக்கும் மக்களை தடுக்கும் பணியில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதி, கியூபா, வெனிசுலா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க மெக்சிகோ எல்லையான தெற்கு டெக்சாஸின் டெல் ரியோ பாலத்தின் அடியில் தற்காலிக முகாம் அமைத்து அகதிகளாக தங்கி உள்ளனர்.
உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேடி எல்லைத் தாண்ட முயலும் மக்களை குதிரைகளில் வந்த அமெரிக்க பாதுகாப்பு படையினர் விரட்டி வருகின்றனர்.