கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு தானமாக வழங்குவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அதன் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வசதி குறைவான 100 நாடுகளுக்கு 500 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா இப்போது அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஒரு பில்லியனாக உயர்த்தியுள்ளது.இதற்காக பைசரின் கோவிட் 19 தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய உள்ளது.
அடுத்த ஆண்டில் சுமார் 70 சதவீத அமெரிக்க மக்களை தடுப்பூசி செலுத்தியவர்களாக்கவும் ஜோ பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.