நிலக்கரி எரியூட்டும் அனல் மின்நிலையத் திட்டங்களை வெளிநாடுகளில் அமைப்பதில்லை எனச் சீன அதிபர் சி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
கரிப்புகை வெளியிடும் அளவை ஒவ்வொரு நாடும் தன் பங்குக்குக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனப் பாரீஸ் உடன்பாடு வலியுறுத்துகிறது. அதன்படி நிலக்கரியை எரியூட்டும் அனல்மின் நிலையங்களைக் கட்டுவதைச் சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என உலக நாடுகள் நெருக்குதல் அளித்து வருகின்றன.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் சி ஜின்பிங், வளரும்நாடுகளில் குறைந்த அளவில் கரிப்புகை வெளியிடும் மின் திட்டங்களுக்கும், பசுமைத் திட்டங்களுக்கும் மட்டுமே சீனா உதவும் என்றும், புதிய அனல் மின்நிலையத் திட்டங்களைக் கட்டமைக்காது என்றும் தெரிவித்தார்.