ஜெர்மனியில் வாடிக்கையாளரை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய பெட்ரோல் பங்க் ஊழியர் சுட்டு கொல்லப்பட்டார். இடர்-ஒபெர்ஸ்டெய்ன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் அமைந்துள்ள மளிகை கடைக்கு 49 வயது நபர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்தார்.
அங்கு பணியில் இருந்த 20 வயது இளைஞர் அவரை முகக்கவசம் அணிந்து வருமாறு கூறியுள்ளார். ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் முகக்கவசம் அணிந்து கடைக்கு வந்த நபர் கவுண்ட்டரில் பணம் செலுத்தும் போது முகக்கவசத்தை கழட்டி அந்த ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஒரு முறை சுட்டதில் 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு முழுக்க அந்த நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் மறுநாள் காலை காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.