ஆஸ்திரேலிய அரசு கட்டுமானத் தொழிலுக்கு தடை விதித்ததை கண்டித்து ஏராளமானக் கட்டுமானத் தொழிலாளர்கள் பேரணி சென்றனர். கட்டுமானத் தொழிலாளர்களால் பல்வேறு பகுதிகளிக்கு கொரோனா பரவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கட்டுமானத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் என விக்டோரிய மாகாண அரசு உத்தரவிட்டது. மேலும் கட்டுமானத் தொழிலுக்கு 2 வாரங்கள் தடை விதித்தது. அதிகாரிகள் கட்டுமானத் தளங்களை மூடியதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.