சிங்கப்பூரில் தூக்கி எரியப்படும் துரியன் பழத் தோல்களில் இருந்து antibacterial பேண்டேஜ்கள் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஆண்டு தோறும் ஒரு கோடியே இருபது லட்சம் துரியன் பழங்கள் உண்ணப்படுகின்றன.
பழங்களை சாப்பிட்ட பின் மக்கள் தோலை தூக்கி எரிவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அவ்வாறு தூக்கி எரியப்படும் துரியன் பழங்களின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் செல்லுலோஸ் பவுடரை உறைய வைக்கும் விஞ்ஞானிகள், பின்னர் அதனுடன் glycerol-ஐ கலந்து antibacterial பேண்டேஜ்-கள் தயாரிக்கின்றனர்.
வழக்கமான பேண்டேஜ்களை விட குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை பேண்டேஜ்கள் காயமடைந்த பகுதிகளை குளிர்ச்சியாக வைப்பதால் காயங்கள் விரைவில் குணமடைகின்றன. இதே போல் சோயா பீன்ஸ் உள்பட பல்வேறு தானியங்களின் தோலை பேண்டேஜ்-களாக மாற்ற முடிவதால் வரும் நாட்களில் உணவு கழிவுகளின் அளவு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.