ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவு பகுதியில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்து சிதறி தீக் குழம்பை கக்கி வருகிறது.
Cumbre Vieja தேசியப் பூங்கா உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதிகள் கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கின்றன. தீக் குழம்புகள் கொப்பளித்து சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் கங்குகள் மணல் போல் கொட்டிக் கிடக்கின்றன.
கால்நடைகள், ஏறத்தாழ 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அளவிலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.