காபூலில் அமெரிக்கா டிரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த 10 பேர் தீவிரவாதிகள் அல்ல , சாதாரண குடிமக்கள்தான் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். அப்பாவி மக்களைக் கொன்றது மிகப்பெரிய தவறு என்று கூறிய அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் ஜெனரல் கென்னத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.