ஆப்கானில் மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தாலிபான்கள் வெளியேற்றி கட்டிட கதவை இழுத்து மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வந்த பெண்களை தாலிபான்கள் திருப்பி அனுப்பியதாகவும், கட்டிடத்தின் பெயரையும் மாற்றியதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஷரியா சட்டத்தின் படி உரிமைகள் வழங்குவதாக அறிவித்து விட்டு தாலிபான்கள் செய்வது அநியாயம் என்று பணிக்கு வந்த பெண்கள் கோஷங்கள் எழுப்பினர்.