தனியாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீன விண்வெளி வீரர்கள் 90 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு போட்டியாக சீனா தனியாக விண்வெளி ஆய்வு மையத்தைக் கட்டி வருகிறது.
இதற்கான பணிகளில் ஈடுபட நை ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய மூவரும் கடந்த 90 நாட்களுக்கு முன் விண்வெளி மையம் சென்றனர்.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்த மூவரும், சீனாவின் வடக்கே உள்ள உள் மங்கோலியாவின் தன்னாட்சி பகுதியில் நேற்று மதியம் பத்திரமாக தரையிறங்கினர்.