4300 கோடி டாலர் மதிப்பில் 12 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்காக, 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் உடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க தொழில்நுட்பத்தில் அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் முதல்முறையாக அணுஆயுதங்கள் இல்லாத நாடான ஆஸ்திரேலியா, அணுசக்தி நீர்மூழ்கிகளை பெற இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டனுடன் இணைந்து புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கி இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிகளை கட்டமைக்க உதவுவோம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் அறிவித்திருந்தார்.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நம்பிக்கை துரோகம் என்று பிரான்ஸ் விமர்சித்துள்ள நிலையில், 3வது நாட்டை குறி வைக்க கூடாது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.