வெனிசுலாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சினோபார்ம் வகை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
அதிகளவிலான மக்கள் முதல் டோஸ் செலுத்திவிட்டதாகவும், 2-வது டோஸ் செலுத்த வந்தவர்களை தடுப்பூசி பற்றாக்குறை என திருப்பி அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் குவிந்த அதிகளவிலான முதியவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.