ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அங்கு அல் கொய்தா தீவிரவாதிகள் மீண்டும் குழுக்களாக இணைந்து வருவதன் ஆரம்ப அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ தெரிவித்துள்ளது.
அதே நேரம் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டு, ஆப்கனில் செயல்பட்ட பல சிஐஏ அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால், அல்கொய்தா தீவிரவாதிகள் எந்த அளவுக்கு திரண்டுள்ளனர் என்ற தகவலை பெற இயலாத நிலை உள்ளதாக சிஐஏ துணை இயக்குநர் டேவிட் கோஹன் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தா ஒரு பலமான அமைப்பாக உருவாக ஒன்று அல்லது 2 ஆண்டுகள் வரை ஆகும் எனவும், அப்போதுஅமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.