விண்வெளிச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதன் முதலாக பொதுமக்களில் 4 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
இதற்காக ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜாரிட் ஐசக் மேன் என்ற கோடீஸ்வரர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் டிராகன் காப்ஸ்யூலில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
தற்போது விண்ணுக்குச் சென்றுள்ள நால்வர் குழுவினர் 3 நாட்கள் விண்வெளியில் இருப்பார்கள்.