சீனாவில் நடைபெற்ற கூட்டு போர் பயிற்சி நிறைவடைந்ததை முன்னிட்டு சீன ராணுவத்துக்குச் சொந்தமான அதிநவீன போர் கருவிகள் மற்றும் ராணுவ வாகனங்கள் காட்சிபடுத்தப்பட்டன.
ஹெனான் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மங்கோலிய வீரர்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
10 நாட்கள் நடைபெற்ற பயிற்சிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் போரிடுவது போன்ற தத்ரூபமான ஒத்திகை நடைபெற்றது.