ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்த இந்த ஒரு மாத காலத்தில் அங்கு கடும் நிதி நெருக்கடியும், பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டு அரசு நிலை குலையும் நிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கனுக்கு வழங்கி வந்த நிதியுதவியை உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சர்வதேச நாடுகள் நிறுத்தி விட்டன. அத்துடன் பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு 200 டாலராக குறைக்கப்பட்டதும் ஆப்கானியர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
இதனால் பொருளாதாரம் வீழ்ந்து விலைவாசி உயர்ந்துள்ளது. பெரும்பாலான தாலிபன் படையினருக்கு பண உதவி கிடைக்காமல் அவர்கள் கிடைத்ததை தின்று விட்டு சாலை ஓர டிரக்குகளில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 40 லட்சம் ஆப்கானியர்கள் உணவு இல்லாமல் பட்டினி கிடக்கின்றனர். பட்டினியால் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.