நார்வே அருகே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய வேட்டையாடும் திருவிழாவை கொண்டாடிய மக்கள் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாரம்பரிய திருவிழாவில் 1,428 வெள்ளை பக்க டால்பின்கள் மோட்டார் படகுகள் மூலம் கடலில் இருந்து கரைக்கு இழுந்து வரப்பட்டு பின்னர் கழுத்தறுத்து கொல்லப்பட்டன.
இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.