காபூலில் உள்ள தீம் பார்க்கில் புகுந்த தாலிபான்கள் அங்கிருந்த ராட்டினம், டாட்ஜெம் எனப்படும் பேட்டரி கார்களில் விளையாடும் வீடியோ வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
மத அடிப்படைவாத ஆட்சிக்கு இடையிடையே தாலிபான்களின் இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தை வட்டமடித்து வருகிறது. காபூல் சிட்டி தீம் பார்க்கிற்குள் நுழைந்த தாலிபான்கள் அங்கிருந்த ரோலர் கோஸ்டர், துப்பாக்கிச் சுடுதல் என பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
கடந்த ஆட்சியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த தாலிபான்கள் தற்போது ஷரியா சட்டத்தின் கீழ் இதற்கு அனுமதித்துள்ளனர்.