அமெரிக்காவில் தொழிற்சங்கங்களைக் கொண்ட நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் திட்டத்துக்கு டொயோட்டோ, ஹோண்டா நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களைக் கொண்ட நிறுவனங்களின் மின்சாரக் கார்களுக்குக் கூடுதலாக 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை வழங்கும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர். தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ள மூன்று பெரிய நிறுவனங்களுக்கு 257 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கும் இந்த மசோதா செவ்வாயன்று வாக்கெடுப்புக்கு வர உள்ளது.
இதை எதிர்த்து டொயோட்டா, ஹோண்டா நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில், இந்த மசோதா நியாயமற்றது என்றும், சங்கத்தில் சேராத தொழிலாளர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.