கொலம்பியாவில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரத்து 407 கிலோ போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
San Andres தீவு கடல் பகுதியில் போதை பொருட்களை மறைத்து எடுத்து சென்ற படகை துரத்திச் சென்ற அதிகாரிகள், துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
படகில் இருந்த 5 பேரை கைது செய்த அதிகாரிகள், மத்திய அமெரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த கொக்கைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் எனக் கூறப்படுகிறது.