ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குத் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியபின் ஏராளமானோர் காபூல் விமானநிலையத்தில் குவிந்ததாலும் அதையடுத்த வன்முறைகளாலும் விமான நிலையம் சேதமடைந்தது.
கத்தார் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்குத் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்குவதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பின் அந்நாட்டுக்குப் பன்னாட்டுப் பயணிகள் விமானங்களை இயக்கும் முதல் நாடு பாகிஸ்தான் ஆகும்.