தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள வன காப்பகத்தில் இருந்து சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் கிளம்பிய ஆசிய யானைக் கூட்டம், சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து இப்போது வேறொரு வாழ்விடத்தை சென்று சேர்ந்துள்ளது.
ஜிஷுவாங்பன்னா (Xishuangbanna) தேசிய வன காப்பகத்தில் இருந்து 16 யானைகளைக் கொண்ட கூட்டம் சென்ற ஆண்டு இடம் பெயர ஆரம்பித்தது.
யானைகளுக்கு வழிகாட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வன அதிகாரிகள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்ட நிலையில், இப்போது 14-ஆக குறைந்துள்ள அந்த யானைக் கூட்டம் யுன்னான் மாகணத்தின் Pu'er City-ல் உள்ள வேறொரு ஆசிய யானைகள் வாழ்விடத்துக்கு சென்று சேர்ந்துள்ளது.