செவ்வாய் கிரகத்தில் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் கலம் வெற்றிகரமாக இரண்டாவது பாறைத்துகளைச் சேகரித்துள்ளது.
இதன் மூலம் சிவப்பு கிரகத்தில் நுண்ணியிரிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். ஜெசேரா க்ரேட்டர் பள்ளத்தாக்கில் உள்ள ரோச்செட்டே என்று பெயரிடப்பட்டுள்ள பாறையில் எடுக்கப்பட்ட பாறைத் துணுக்கு பெர்சிவரன்சில் உள்ள டைட்டானியம் குழாயில் அடைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை இதே பாறையில் துளையிட்டு துகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.