ஆப்கனில் தாலிபான்கள் அமைத்துள்ள அரசு, அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி பதவி ஏற்கும் என கூறப்படுகிறது.
2001 செப்டம்பர் 11 ல் அல்கொய்தா தீவிரவாதிகள், நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 2 கட்டிடங்களையும், கடத்தப்பட்ட பயணியர் விமானங்களால் மோதி தகர்த்தனர்.
அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இது நடந்து 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், தாலிபான்கள் அந்த தினத்தில் பதவியேற்பு விழாவை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு இந்தியா, சீனா, துருக்கி, பாகிஸ்தான், ஈரான், கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தாலிபன்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எல்லா நாடுகளுடனும் சுமுகமான உறவைப் பேண விரும்புவதாகவும், காபூலில் தங்களது தூதரகங்களை திறக்க முன்வர வேண்டும் எனவும் தாலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.