அமெரிக்காவில் மின் கம்பத்திற்குள் சிக்கிக் கொண்ட பூனையை ஊழியர் ஒருவர் மீட்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. நெப்ராஸ்கா மாகாணத்தின் லிங்கன் சிட்டியில் உள்ள சாலையோர மின் கம்பத்தின் உள்பகுதியில் பூனை ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது.
மின் கம்பத்தில் இருந்து வெளியே வர முடியாமல் திகைத்த பூனையை டிராபிக் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியர் David Woitaszewski லாவகமாக மீட்கும் காட்சி சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.