ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒன்றாக இணைந்து Zapad-2021 என்ற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பால்டிக் கடற்பகுதியை ஒட்டியுள்ள கலினின்கிராட் மாகாணத்தில் இரு நாட்டு வீரர்களும் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஏறத்தாழ 2 லட்சம் வீரர்கள், 80 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 300 டேங்கர்கள், 15 போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ரஷ்யா, பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சிக்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.