வடக்கு மசிடோனியா-வில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள டெடோவா நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அடுத்த சில மணி நேரங்களில் தீயைக் கட்டுப்படுத்தினர். இருந்த போதும் 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.