குவைத்தில், பாலைவனத்தில் வீசப்பட்ட பழுதடைந்த கார் டயர்களை மறுசுழற்சி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
அர்ஹியா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் நாலேகால் கோடிக்கும் அதிகமான கார் டயர்கள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
அந்த டயர்கள் சில சமயம் தீ பற்றி எரிவதால் நச்சுப்புகை வெளியாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான மறுசுழற்சி மையத்தில் அந்த டயர்கள் சிறு துகள்களாக மாற்றப்பட்டு, டைல்ஸ்கள் மீது பதிக்கப்படுகின்றன.