பிரேசிலின் அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தங்கச் சுரங்கங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூர்வகுடிகள் வசிக்கும் அமேசான் வனப்பகுதியில் சுரங்க வணிகத்திற்கு அனுமதி வழங்க அதிபர் Jair Bolsonaro தலைமையிலான அரசு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், பாதுகாக்கப்பட்ட பூர்வகுடி சமூகங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த அமேசான் காடுகளில் புதைந்துள்ள தங்கத்தை பல நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் வெட்டி எடுப்பது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சுரங்கங்கள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதுடன், மண்ணிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் பாதரசம் நதிகளில் கலப்பதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.