பிரேசிலில் காடுகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, சூரிய சக்தி மின் உற்பத்திக்காக 10ஆயிரம் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மானஸில் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின் விநியோகம் செய்யும் வகையில் Bemol என்ற நிறுவனம் சோலார் பேனல்களை அமைத்துள்ளது.
இதன் மூலம் 672 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தவிர்த்து ஆண்டுக்கு 27ஆயிரம் மரங்களின் ஆயுளை பாதுகாக்கக் கூடும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அத்தோடு, இந்த சோலார் பேனல்களை பயன்படுத்தும் பயனாளர்களால், ஆண்டுக்கான சராசரி மின் கட்டணத்தில் 10சதவீதத்தை சேமிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.