உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 374 உயிரினங்களில் 28 விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளதாக IUCN எனப்படும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வறிக்கையில், பல்வேறு கடல் பிராந்தியங்களில் டூனா எனப்படும் சூரை மீன்கள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சுறா மீன்கள் எண்ணிக்கை 37 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், கொமேடோ டிராகன்களும் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், வாழ்விடம் சுருங்குதல், போதிய உணவின்மையே உயிரினங்கள் அழிவுக்கு காரணம் என IUCN அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.