ஹாங்காங்கில் இறந்த வளர்ப்பு விலங்குகளின் உடல்களை அடக்கம் செய்ய அதிக செலவு பிடிப்பதால், பசுமை தகன முறை பிரபலமடைந்து வருகிறது. ஹாங்காங்கில் நிலத்தின் விலை விண்ணைத் தொடுவதால் இறந்த செல்ல பிராணிகளை புதைக்க அதிகம் செலவாவதாக கூறப்படுகிறது.
செலவு செய்ய முடியாதவர்களின் இறந்த நாய், பூனைகளை அந்நாட்டு அரசு கழிவோடு கழிவாக கொட்டிவிடுவதாக கூறப்படும் நிலையில், இறந்த பிராணிகளுக்கு குறைந்த விலையில் உகந்த மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டு அவற்றின் சாம்பல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.