புதிய அரசு அமைக்க உள்ள தாலிபன்களின் தலைவர் முல்லா பராதர், காபூலில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஐநா.சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தாலிபன் செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், தாலிபன் அரசுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க ஐநா.சபை உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.