நியூசிலாந்தில் 7 பேரை கத்தியால் தாக்கிய இலங்கைத் தமிழரான சம்சுதீனை (Samsudeen) பல ஆண்டுகளுக்கு முன்பே நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக பிரதமர் ஜெசிந்தா (Jacinda) தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கான விசா மூலம் நியூசிலாந்து சென்ற சம்சுதீன் அங்கு அகதியாகத் தங்கி வந்தான். தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டது தொடர்பாக போலீஸ் விசாரித்த போது அவன் அகதியாகத் தங்க முறைகேடாக அனுமதி வாங்கியது தெரிய வந்தது.
சம்சுதீனை சிறையில் அடைத்த அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்ட போது சம்சுதீன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
சம்சுதீனால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால் அவனை இலங்கைக்கு நாடு கடத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
3 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் பெயிலில் வந்த சம்சுதீன் சூப்பர் மார்கெட்டில் இருந்த கத்தியால் 7 பேரை தாக்கியதால் போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர்.
சட்டத்தில் உள்ள குறைபாடுகளால் அவனால் சுதந்திரமாக நடமாட நேர்ந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் ஜெசிந்தா, தீவிரவாத தடுப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்க முடிவெடுத்துள்ளார்.