துருக்கியில் நடந்த ஒரு விழாவில் அதிபர் தாயிப் எர்டோகன், ஒரு சிறுவனிடம் செல்லமாக சண்டை போடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரைஸ் மாகாணத்தில் நடந்த சுரங்கப்பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் எர்டோகன், மேடையில் சிறு குழந்தைகளுடன் சேர்ந்து ரிப்பன் வெட்ட முடிவு செய்திருந்தார்.
பேச்சாளரின் நீண்ட பேச்சால் கடுப்பான ஒரு சிறுவன் விறுவிறுவென ரிப்பனை வெட்டிவிட்டான். அருகில் இருந்தவர்கள் ஒருவிதமாக பார்க்க தொடங்கியதும் ரிப்பனை எடுத்து ஒட்டுப்போட தொடங்கினான்.
இதைக்கண்ட அதிபர், அவனுடன் செல்லச் சண்டை போடும் காட்சி நேரலையில் வெளியாகி பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.