ஆப்கானிஸ்தானில் பேரணி சென்ற பெண்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
தலைநகர் காபுலில் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஏராளமான பெண்கள் பேரணி சென்றனர். அவர்களைத் தாலிபான்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், Electric Taser-களால் ஷாக் வைத்தும் அந்தப் பெண்களைத் தாலிபான்கள் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ரத்தம் வரும் அளவிற்கு துப்பாக்கியால் அடிக்கப்பட்டார்.