புடாபெஸ்ட்ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர்களை பார்த்து ஹங்கேரி பார்வையாளர்கள் இனவெறி கோஷங்கள் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹங்கேரி- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், இங்கிலாந்தின் Raheem Sterling முதல் கோலை அடித்தார். அதை பொறுத்துக் கொள்ளமுடியாத ஹங்கேரி பார்வையாளர்கள் சிலர் Raheem-ஐ குறிவைத்து இனவெறி கோஷங்களை எழுப்பியதுடன் பிளாஸ்டிக் பாட்டில்களை இங்கிலாந்து வீரர்கள் மீது வீசினர்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர்கள் மீது நடந்த தாக்குதல் ஒரு வெட்கக்கேடான விஷயம் என்று தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இது குறித்து FIFA அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.