தடுப்பூசி போட்டுக்கொண்டு அபுதாபிக்கு வரும் சர்வதேச பயணிகள் இனி குவாரன்டைனில் இருக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விசா வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் எனவும், வரும் 5ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் அபுதாபி அரசு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
அதே நேரம் அபுதாபிக்கு வருபவர்கள் நெகடிவ் பிசிஆர் சோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதற்கான சோதனையை அபுதாபிக்கு விமானம் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு உள்ளாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.