அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி மரத்தில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய பசு பத்திரமாக மீட்கப்பட்டது.
ஐடா புயல் லூசியானா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கரையைக் கடந்தது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் காரணமாக கனமழையும், பெரு வெள்ளமும் ஏற்பட்டது. இதில் வெள்ளத்தில் சிக்கிய 60க்கும் மேற்பட்ட பசுக்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் வெள்ளம் வடிந்து இரு நாட்களுக்குப் பின் புறநகரில் உள்ள வனப்பகுதியில் மரத்தில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய பசு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.