காபூலில் இருந்து 6 ஆயிரம் அமெரிக்க மக்களையும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிமக்களையும் வெளியேற்றி இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட ஆப்கானியர்கள் தங்கள் குடும்பங்களுடன் அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க இருப்பதாகவும் லாயிட் தெரிவித்தார்.
நோய்த் தொற்று பரிசோதனை, பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய நடைமுறைகளைத் தொடர்ந்து அவர்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.