ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்து இன்னும் சில தினங்களில் தாலிபான்கள் அறிவிப்பார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான் அமைப்பினர் மற்றும் இதர ஆப்கான் தலைவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அரசு மற்றும் அமைச்சரவையின் உச்சபட்ச மத தலைவராக தலிபான் சுப்ரீம் கமாண்டர் ஹைபத்துல்லா அகுண்ட்ஸடா இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் 3 துணை தலைவர்களில் ஒருவரான முல்லா அப்துல்கானி பரதர், புதிய அரசின் பொறுப்பாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.