ஒரு வகையான பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸ் பல்கி பெருகுவதை கட்டப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
Jararacussu வகையிலான கட்டுவிரியன் பாம்பின் விஷத்தில் இருக்கும் இந்த மூலக்கூறு, கொரோனா வைரஸ் செல் பெருக்கத்தை 75 சதவிகிதம் வரை குறைப்பதாக, குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது என அறிவியல் இதழான Molecules தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் முக்கிய புரோட்டீனை இந்த மூலக்கூறு பெருகாமல் தடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவ் பாவுலோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டு பிடிப்பு, கொரோனாவை அழிக்கும் மருந்தை உருவாக்குவதின் முதல் படியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த மூலக்கூறை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கலாம் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் அது எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல் எதையும் வெளியிடவில்லை