சீனாவில் திடீரென வீசிய சுழற்காற்றினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் உள்ள ஹூலுடாவோ என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென சுழற்காற்று வீசியது.
அதிவேகமாகச் சுழன்று வீசிய அந்தக் காற்றில் சிக்கி சில மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இந்தக் காற்றின் தாக்கம் காரணமாக கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. 50க்கும் மேற்பட்ட வீடுகள் சுழற்காற்றினால் பாதிக்கப்பட்டன.