அல் கொய்தாவும், ஐஎஸ் அமைப்பும் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்குள் வந்து விட்டதாக பின்லேடன் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்த அமீன் உல் ஹக் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். தோரா போரா மலையில் பின்லேடன் இருந்த போது அவருடன் இருந்த அமீன், அமெரிக்கப் படைகள் தாக்குதலின் போது தப்பிச் சென்றார்.
தற்போது நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள சொந்த ஊருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களுடன் அவர் திரும்பியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஏனைய அல் கொய்தா தீவிரவாதிகளும் நாடு திரும்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.