அணு ஆயுதம் தயாரிக்க தனது முக்கிய அணு சக்தி நிலையத்தை வட கொரியா மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது போல தெரிவதாக ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
தலைநகர் பியோங்யாங்-க்கு வடக்கில் யோங்பியான்-ல் உள்ள அணுசக்தி மையத்தில், அணு ஆயுதம் தயாரிக்க தேவைப்படும் முக்கிய பொருட்களான புளூட்டோனியம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவற்றை வட கொரியா தயாரிப்பது போல தெரிவதாக சர்வதேச அணுசக்தி முகமை அதன் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, செயற்கைக்கோள் படங்கள் மூலம் அணுசக்தி மையத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.