அமெரிக்காவை அச்சுறுத்திய 4ம் நிலைப் புயலான ஐடா புயல் லூசியானாவில் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்தபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் மணிக்கு 252 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றின் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். கடற்கரையோரம் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஐடா புயல் கரையைக் கடந்த போது அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.