பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத் தொடரில் நடந்த UTMB ஓட்டத்தில் பிரெஞ்சு வீரர் பிராங்கோ டிஹேன் முதலிடத்தையும் அமெரிக்க வீரர் கோர்ட்னி டாவால்ட்டர் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர்.
32 ஆயிரம் அடி உயரத்தில் 170 கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த சாகச போட்டியில் பலர் பங்கேற்றனர். இந்த தூரத்தை 20 மணி 45 நிமிடங்களில் கடந்து பிராங்கோயிசும், 22 மணி 30 நிமிடத்தில் கடந்து கோர்ட்னி டாவால்டும் முதல் மற்றும் 2 ஆம் இடத்தை பிடித்து வெற்றிக்கனியை பறித்தனர்.
2003 ல் இந்த போட்டிகள் துவங்கியதில் இருந்து தொடர்ந்து 4 ஆவது முறையாக முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் பிரெஞ்சு வீரர்பிராங்கோ டிஹேன்.
அமெரிக்காவின் கோர்ட்னி டாவால்ட்டர், இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளார்.