அமெரிக்காவில் 50 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்த மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மிச்சிகன் மாகாணத்தின் லூசி கவுண்டியில் ஓடும் தக்வாமேனன் என்ற நதியை சில சுற்றுலாப் பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, துள்ளிக் குதித்தபடி மான் ஒன்று ஆற்றின் மீது ஓடிக் கொண்டிருந்தது.
இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் ஆரவரிக்கும் முன்பே 50 அடி உயரமுள்ள அருவியின் நுனியில் நின்ற மான், அடுத்த நொடியே அருவியில் இருந்து இடறி விழுந்தது. சுற்றுலா பயணிகள் பதைபதைக்கும் போதே சர்வசாதாரணமாக நீந்தி மறு கரைக்குச் சென்றது.